Our Feeds


Friday, August 21, 2026

ShortNews

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில், ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளது.

பரினகொச்சோஸ் மாகாணத்தில் உபஹசொ நகரிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில், 66 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், ஐகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »