Our Feeds


Monday, August 31, 2026

Zameera

பேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்குமா? இன்று முடிவு


 பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »