Our Feeds


Wednesday, August 5, 2026

Zameera

ஆசன பட்டி பொருத்துவதற்கான கால அவகாசம் நீடிப்பு


 அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.Government மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கட்டளையின்படி, 

அதிவேக வீதிகளில் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 ஆசன பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்து பொருத்துவதற்காக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகைக் காலம் 2026 ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. 

 எனவே, இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த அரசாங்கம், 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் குறித்த கட்டளையில் திருத்தம் செய்து, சலுகைக் காலத்தை 2026 செப்டம்பர் 19 வரை நீடித்துள்ளது. 

 போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »