பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் விடுத்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சாகர காரியவசம், ‘தற்போதைய 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம், அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி, நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், நாட்டின் 37 ஆவது காவல்துறை மா அதிபரான இவர், வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ் மா அதிபராக வரலாற்றில் இணைவதை தான் காண விரும்பவில்லை’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசாங்கம் இவ்வாறான கருத்துக்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாது எனவும், இதுகுறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில் மக்களை பலிகொடுத்த ஒரு அரசியல் இயக்கத்தின் மனநிலையே இவ்வாறான கூற்றுகளில் பிரதிபலிப்பாகும். சாகர காரியவசத்தின் இந்தக் கருத்து முற்றிலும் பொறுப்பற்ற ஒரு செயல் ஆகும்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருவதுடன். ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள் காரணமாகப் அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சந்தேகம் ஏற்படுகிறது.
அத்துடன், விசாரணைகளின் அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
Wednesday, August 5, 2026
சாகரவின் சர்ச்சைக் கருத்துக்கு உடனடி விசாரணை - அமைச்சர் ஆனந்த விஜேபால!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
