பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார்.
எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Monday, August 31, 2026
அர்ச்சுனாவின் எம்.பி பதவி எதிர்ப்பு மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
