தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஐ.டி. உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக அவர் பேசியது சர்ச்சையானது.
உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு வழக்கு தொடர்பாக உதயநிதியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
