முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ‘மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி’ என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கௌரவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
மேலும், ‘KGF’ திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட இந்தக் கௌரவப் பட்டம் தொடர்பான நிகழ்வு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
