Our Feeds


Friday, August 7, 2026

ShortNews

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!


மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்டசகர் தெரிவித்தார்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தின, சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று(7) இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »