அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் வெள்ளிக்கிழமை (31) மாலை 04.45மணியளவில் இடம் பெற்றது அஸ்வெசும ஊழல் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் இடம் மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் 2025ம் ஆண்டு முதல் இதுவரை காலப்பகுதியில் 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் இடமாற்றப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள் எனவும் 33 மற்றும் 30வயதுகளை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது இதேவேளை அஸ்வெசு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இரண்டு சந்தேக நபர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கபாபடுகிறது இரண்டு சந்தேக நபர்களும் 01.08.2026.சனிக்கிழமை ஹட்டன் நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்ற விசாரணை பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
