கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
Ward Sister திருமதி எஸ். கமலேஸ்வரி அவர்களுக்கு கௌரவப் பிரியாவிடை.............................................................................................................................
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Ward Sister ஆகக் கடமையாற்றி ஓய்வுபெற்று செல்லும் திருமதி எஸ். கமலேஸ்வரி அவர்களை கௌரவிக்கும் வகையில் பிரியாவிடை நிகழ்வு இன்று (2026.08.19) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வைத்திய அத்தியட்சகர் Dr. I.L.M. றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொது வைத்திய நிபுணர், வைத்தியர்கள், கணக்காளர், Matron, நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவச்சிகள் (Midwives) உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஓய்வுபெற்று செல்லும் திருமதி எஸ். கமலேஸ்வரி அவர்களின் நீண்டகால சேவையைப் பாராட்டி, வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களால் நினைவுப் பரிசில்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் அவரின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஊடகப் பிரிவு
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
கல்முனை
