Our Feeds


Saturday, September 5, 2026

Zameera

குளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து 17 வயது இளைஞன் பலி!


 திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 


குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து  குளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


 


விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


 


எனினும், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான். இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.


 


சம்பவம் தொடர்பாக திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »