Our Feeds


Friday, September 25, 2026

Zameera

20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிப்பு

 


"வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக மேலும் 20 காடுகள் நாளை (26) பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 


இந்த வேலைத்திட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திகே தலைமையில் நுவரெலியா சததென்ன வனக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 


இதன்படி நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 20 காடுகள் வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளதுடன், அவற்றின் மொத்த நிலப்பரப்பு சுமார் 9,538 ஹெக்டேயர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


தற்போதுள்ள தற்போதைய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனப்பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து இதுவரை 93 காடுகளைப் பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளது. 


இந்நிலையில் நாளை வர்த்தமானியில் வெளியிடப்படும் வனப்பகுதிகளுடன் சேர்த்து அவற்றின் மொத்த நிலப்பரப்பு சுமார் 65,000 ஹெக்டேயராக அதிகரிக்கவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »