Our Feeds


Thursday, September 3, 2026

Zameera

காட்டு யானை தாக்கி பேருந்து விபத்து – 21 பேர் காயம்


 கதிர்காமம்–புத்தல வீதியில் காட்டு யானை தாக்கியதில், ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.




இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



செய்தி விபரம் 👇🏻



கதிர்காமம்–புத்தல வீதியில் காட்டு யானை தாக்கியதில், சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.




இந்த விபத்தில் சுமார் 10 பயணிகள் காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




காயமடைந்தவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மின்சார வேலி சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று (03) காலை சுமார் 11.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.




சிலாபத்திலிருந்து யாத்திரிகர்கள் குழுவொன்றை கதிர்காமத்திற்கு அழைத்து வந்த பின்னர், பேருந்து புத்தல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




வீதியில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை ஒன்று திடீரென பேருந்தைத் தாக்கியதாக கூறப்படுகிறது.




யானையின் தாக்குதலையடுத்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து,விபத்து ஏற்பட்டுள்ளது.




சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »