Our Feeds


Friday, September 25, 2026

ShortNews

22ஆவது திருத்தம் - இன்று மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு!


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை 7 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று அதன் இறுதி நாள் விவாதம் நடைபெறுகின்றது.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை எனவும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாதம் நிறைவடைந்த பின்னர் இரு சட்டமூலங்கள் மீதும் இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »