Our Feeds


Tuesday, September 29, 2026

SHAHNI RAMEES

ரூ. 66 இலட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும்! - முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

 


அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதன்

மூலம் முன்னாள் அமைச்சர் பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் இன்று (29) செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அத்தோடு 66 இலட்சம் ரூபா பணத்தை ஒருங்கிணைந்த நிதியத்திற்கு செலுத்துமாறும் உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது.

​இதில் 1,664,334.93 ரூபா தொகையை ஒரு மாதத்திற்குள்ளும், எஞ்சிய தொகையை இரண்டு மாதங்களுக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

​துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படத்துடன் மக்களிடம் மன்னிப்பு கோரும் அரைப் பக்க விளம்பரத்தை சிலுமின (Silumina), சண்டே ஒப்சர்வர் (Sunday Observer) மற்றும் தினகரன் (Thinakaran) ஆகிய நாளிதழ்களின் முகப்புப் பக்கத்தில் ஒரு மாதத்திற்குள் வெளியிடுமாறும் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »