Our Feeds


Saturday, September 5, 2026

Zameera

6ம் திகதி மு.க பேராளர் மாநாடு - ஹக்கீம் தலைமையில் முக்கிய ஆலோசனை

 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32வது பேராளர் மாநாடு - 2026 மற்றும் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (04.09.2026) காத்தான்குடியில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தலைவருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபையின் நகர பிதாவுமான எம்.எஸ். நளீம், காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் (ஜே.பி), கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »