Our Feeds


Thursday, September 24, 2026

Zameera

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 6 பேர் காயம்


 புத்தள - மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று (24) காலை விபத்தொன்று சம்பவித்துள்ளது. 


இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக மஹகொடையாய பகுதியில் நிறுத்தப்பட்டபோது, மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பின்னாலிருந்து வந்த தனியார் பேருந்து, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்து தொடர்பாகப் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »