Our Feeds


Sunday, September 27, 2026

SHAHNI RAMEES

BJPயின் அழைப்பில் டில்வின் சில்வா தலைமையில் ஆதம்பாவா உள்ளிட்ட JVP தூதுக்குழு இந்தியா விஜயம்!



 ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

தலைமையில் நால்வர் கொண்ட குழுவொன்று டில்லிக்கு நேற்று சனிக்கிழமை (26) விஜயம் செய்துள்ளது. 


இந்தியாவின் ஆளும் தரப்பான பாரதிய ஜனதா கட்சியினுடைய அழைப்பில் குறித்த பயணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் விடுதலை முன்னணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் முகமாக இந்த பயணம் இருக்கும் என டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


நான்கு நாட்கள் டில்லியில் தங்கியிருக்கவுள்ள ரில்வின் தலைமையிலான குழுவினர் பா.ஜ.க.வின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடவுள்ளனர்.


இதேவேளை குறித்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தமிழ் பேசும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


முன்னதாக கடந்தாண்டு ஜூன் 09ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பில் ரில்வின் தலைமையிலான குழுவொன்று பீஜிங்குக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »