Our Feeds


Thursday, September 3, 2026

Zameera

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு


 கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.




அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசியமான பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.




நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, சொய்சாபுரம் மற்றும் இராவதாவத்தை.கடலோர மற்றும் உப பகுதிகளானஅங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த. மற்றும் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள் கொழும்பு 06, செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை.




பராமரிப்புப் பணிகள் காரணமாக நுகர்வோருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களுக்குச் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட இந்த 24 மணி நேரத்திற்கு நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »