Our Feeds


Tuesday, September 22, 2026

ShortNews

சலேவுக்கு தொடர் சிகிச்சை அவசியம் என மருத்துவக் குழு பரிந்துரை!


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சையளிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், எதிர்வரும் 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »