(க.சிவலிங்கமூர்த்தி)
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான அனோஜனுக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக, இராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அணுகக்கூடிய உயரிய மட்டங்களில் அணுகி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார்.
திங்கட்கிழமை (20) கட்டார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, அங்கு நடைபெற்ற சந்திப்பொன்றில் புலம்பெயர் தமிழர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
சவூதி அரேபியாவின் சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகக் கருதப்பட்ட ஒரு விடயம் தொடர்பில் அனோஜனுக்கு ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனோஜனின் குடும்பத்தினர் தம்மைச் சந்தித்திருந்ததாகவும், அப்போது அவர்களுக்கு மேன்முறையீடு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நாங்கள் வழங்கிய அறிவுறுத்தல் என்னவென்றால், இந்த விடயத்தில் எங்களால் எமது சொந்த தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது என்பதாகும். இரண்டு விதமான வழிகள் இருந்தன. ஒன்று, நீங்கள் மேன்முறையீடு செய்யப் போகின்றீர்களா இல்லையா என்பதாகும்.
மேன்முறையீடு செய்யப் போகின்றோம் என்று நீங்கள் கூறினால், அதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுப்போம் என்று தெரிவித்தோம். அதற்கமைய மேன்முறையீட்டுக்குத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுத்தோம்.
இலங்கையில் இதே மாதிரியான வழக்கு அல்லாத போதிலும், வேறொரு வழக்கில் மேன்முறையீட்டின் பின்னர் தண்டனை அதிகரிக்கப்பட்ட ஒரு உதாரணம் இருக்கின்றது. ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட ஒருவருக்கு பின்னர் அந்தத் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்ட ஒரு சம்பவமும் உள்ளது. எனவே, இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு மேன்முறையீடு செய்வதா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள் என்றும் மேன்முறையீடு செய்வதாகத் தீர்மானித்தால் அதற்குரிய வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுப்போம் என்றும் தெரிவித்தேன்.
அனோஜனின் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தூதரகமும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததது. மேன்முறையீட்டின் பின்னரே தண்டனை அதிகரிக்கப்பட்டு மரண தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. எமது நாட்டின் குடிமகன் அவர் செய்தது சரியா தவறா என்பதற்கு அப்பால், எமது நாட்டைச் சேர்ந்த ஒரு குடிமகன் ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்போது, அரசாங்கம் என்ற ரீதியில் மாத்திரமன்றி மனிதாபிமான அடிப்படையிலும் இந்த விடயத்தை அணுகுவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம்
இன்று காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. நாங்கள் கொழும்புக்கு வந்திருக்கின்றோம் என்று அவர்கள் தெரிவித்தார்கள். மரண தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர் எமது தரப்பைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நேரடியாகச் சென்று சந்தித்திருந்தார்கள். இன்று காலை நான் நேரடியாகத் தொடர்புகொண்டு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன்.
அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுவெளியில் வெளிப்படுத்தி முன்னெடுப்பதில்லை. சில விடயங்களை இராஜதந்திர ரீதியாகக் கையாள வேண்டியுள்ளதது. சில விடயங்களை நாங்கள் பொதுவெளியில் கலந்துரையாட வேண்டியிருக்கும். சில விடயங்களை இராஜதந்திர ரீதியாகக் கையாள வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் ஒலிபெருக்கியில் கூறி காணொளியாக வெளியிட முடியாது. சில விடயங்கள் மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக இது மதம் தொடர்பான விடயம் என்பதால், சவூதி அரேபியாவைப் பொறுத்தவரையில் மிகவும் நுணுக்கமான ஒரு விடயமாகும்.
அனோஜன் விவகாரத்தில் எது சரி, எது தவறு என்பதை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செயற்படாமல், இலங்கைப் பிரஜை ஒருவர் எதிர்கொண்டுள்ள பிரச்சினையாகக் கருதி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
நாங்கள் இராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அணுகக்கூடிய உயரிய மட்டங்களில் அணுகி, அவருக்கு ஒரு மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களைப் பின்பற்றுமாறு நாங்கள் தொடர்ச்சியாகக் கூறியிருந்தோம். ஆகவே, புலம்பெயர் சமூகமாக நாம் வாழ்கின்ற நிலையில், கசப்பான உண்மையாக இருந்தாலும் அந்தந்த நாடுகளின் சட்டங்களை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும்.
அதே சமயம், அரசாங்கம் என்ற ரீதியில் எங்களால் வெளிப்படையாக முன்னெடுக்கக்கூடிய பல விடயங்களை வெளிப்படையாகச் செய்வோம். சில விடயங்களை மறைமுகமாகச் செய்வோம். அனைத்து விடயங்களிலும் எது சரியான பாதையோ, அந்தப் பாதையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து, எங்களால் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா மேலும் சுட்டிக்காட்டினார். (க.சிவலிங்கமூர்த்தி)

அதே சமயம், அரசாங்கம் என்ற ரீதியில் எங்களால் வெளிப்படையாக முன்னெடுக்கக்கூடிய பல விடயங்களை வெளிப்படையாகச் செய்வோம். சில விடயங்களை மறைமுகமாகச் செய்வோம். அனைத்து விடயங்களிலும் எது சரியான பாதையோ, அந்தப் பாதையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து, எங்களால் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா மேலும் சுட்டிக்காட்டினார்.