Our Feeds


Thursday, September 3, 2026

ShortNews

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள வழக்கை, எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பாற்பட்டு 7.5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை மேலதிக விசாரணைக்காக செப்டம்பர் 22ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.

அன்றைய தினம் சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் வகையில் அவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சராகப் பதவி வகித்தபோது, தனது சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பாற்பட்டு 7.5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததன் மூலம் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக விமல் வீரவன்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »