Our Feeds


Friday, September 25, 2026

Zameera

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

 


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (25) காலை கொழும்பு 7 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது


இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எனினும், சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை – இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னரும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »