Our Feeds


Saturday, September 26, 2026

Zameera

வைத்தியசாலை வெடிப்பு சம்பவம் : படுகாயமடைந்த சுகாதார உதவியாளர் உயிரிழப்பு


 பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 36 வயதுடைய சுகாதாரப் பணி உதவியாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று சனிக்கிழமை  (26) அதிகாலை 4:00 மணியளவில் சமையலறையில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் மேலும் இருவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »