கடந்த சில நாட்களாக நிலவிய பலத்த மழை காரணமாக அதிகரித்திருந்த நாட்டின் பிரதான ஆறுகளின் நீர்மட்டங்கள், தற்போது படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பின்வரும் ஆறுகளின் நீர்மட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னமும் சிறிய அளவிலான வெள்ள அபாய மட்டத்திலேயே நிலவி வருகின்றது
குடா கங்கை: மில்லகந்த பகுதி
கிங் கங்கை: பத்தேகம பகுதி
நில்வலா கங்கை: தல்கஹகொட பகுதி
குறித்த அனைத்துப் பகுதிகளிலும் தற்போது நீர்மட்டம் மெதுவாகக் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நில்வலா கங்கையின் நீர்மட்டம் பனாதுகம பகுதியில் எச்சரிக்கை மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அங்கேயும் நீர்மட்டம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாகத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.