Our Feeds


Friday, September 18, 2026

Zameera

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்துடன் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) இடம்பெறவுள்ளது. 


சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 


வடமாகாண மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் மாகாண சபையின் நோக்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


அதன்படி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய மருந்தகத்துடன் கூடிய குடியிருப்பு வளாகத்திற்காக ஒதுக்கப்பட் ட நிதி 282.52 மில்லியன் ரூபாவாகும். 


கட்டுமானப் பணிகளை 2027 ஒகஸ்ட் மாதமளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


வைத்தியசாலையின் லிஃப்ட் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கபட்டுள்ளது. அதற்காக செலவிடப்படும் தொகை 53 மில்லியன் ரூபாவாகும். 


வடமாகாண சபையின் விதிகளின் கீழ் அந்த ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »