UNHRC அறிக்கையில் வெளிப்பாடு!
2026 வரவு செலவுத் திட்டத்தின் படி, நாட்டின் அரச வருமானத்தில் 49.38% பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலன்புரி சேவைகள் முடக்கம்: அரச வருமானத்தின் பெரும்பகுதி கடன் சேவைக்காக செலவிடப்படுவதால் சுகாதாரம், கல்வி, வறுமைப்பட்ட மற்றும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய சமூகங்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு 1.9% முதல் 2.4% வரையிலான மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மேலதிக சுமை: வரையறுக்கப்பட்ட அரச நிதி நிலைமைக்கு மத்தியில் எரிசக்தி, உணவு மற்றும் உரங்களின் விலைகள் அதிகரிப்பதன் காரணமாக மக்கள் மீது மேலதிக சுமை சுமத்தப்படலாம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
