Our Feeds


Thursday, September 3, 2026

ShortNews

பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!


நாட்டின் சில கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »