வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போது, கடல் அட்டைத் தொழில் தொடர்பான பிரச்சினைகள், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வடமாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
