பம்பலப்பிடிய முதல் தெஹிவளை வரை அனுமதியின்றி இயங்கும் ஹோட்டல்களுக்கு கடும் எச்சரிக்கை அறிவிப்பு.
பம்பலப்பிட்டிய முதல் தெஹிவளை வரையிலான கடலோரப் பகுதியில் இயங்கிவரும் அனுமதியற்ற ஹோட்டல்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை செப்டம்பர் 10ம் தேதிக்கு முன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிலுமின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதியற்ற நிறுவனங்களை அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது.
கடலோரப் பகுதியில் இயங்கிவரும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.