சுற்றுலா மற்றும் பயணத்துறையின் வளர்ச்சியில் உலகளவில் வேகமாக முன்னேற்றம் கண்டுள்ள முதல் 10 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
உலக பொருளாதார மன்றத்தினால் (WEF) வெளியிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான Travel and Tourism Development Index (TTDI) அறிக்கையின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் சுற்றுலா மற்றும் பயணத்துறை மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை 4.33 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அல்பேனியா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்நாட்டின் குறியீட்டு மதிப்பெண் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வியட்நாம் 6.3 சதவீத முன்னேற்றத்துடன் இரண்டாவது இடத்திலும், லாவோஸ் 6.1 சதவீத முன்னேற்றத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.