(நமது நிருபர்)
இந்த ஆண்டு இதுவரை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7,647 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மேற்குறித்த முறைப்பாடுகளில் அதீத பாதிப்புக்குள்ளான நிலை, உடல் ,உள ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் முதலியவை உள்ளடங்குகின்றன.
மேலும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான முறைப்பாடுகளை 1929 என்னும் தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்க முடியும் என்றார்.