Our Feeds


Sunday, September 20, 2026

ShortNews

மகாவலி ஆற்றில் வெள்ள அபாயம் - எச்சரிக்கை விடுப்பு!


மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக, பஸ்பாகே கோரலே (Pasbage Korale) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், இப்பகுதிகள் வழியாகச் செல்லும் வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இப்பகுதிகளில் மகாவலி ஆற்றின் அண்மையில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாகத் தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »