Our Feeds


Sunday, September 20, 2026

Zameera

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்


 சட்டமானது அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதே அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் அடிப்படைத் தூணாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 


அரசு சேவையிலுள்ள அனைத்து அதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படை விடயம் என்னவென்றால், சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதாகும். 


அது ஆட்சியாளர், அரசியல்வாதி, அரச அதிகாரி மற்றும் சாதாரண பிரஜை ஆகிய அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுமே ஆகும். 


சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பயிற்சிபெற்ற இரண்டாம் தர சிறைச்சாலையதிகாரிகள் மற்றும் சிறைக் கட்டுப்பாட்டாளர்களின் வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். 


இரு பயிற்சிப் பாடநெறிகளின் கீழ் 265 அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறியதுடன், இந்நிகழ்வு நேற்று (19) நடைபெற்றது. 


அதிகாரம் உள்ள நபருக்கு ஒரு சட்டமும், அதிகாரம் இல்லாத நபருக்கு வேறொரு சட்டமும் இருப்பது சட்டத்தின் ஆட்சியல்ல என்றும், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதே உண்மையான சட்டத்தின் ஆட்சி என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். 


அரசு ஊழியர்களுக்குத் எவ்வித அரசியல் தொடர்போ அல்லது அழுத்தங்களோ அவசியமல்ல. மறாக அவர்களுக்கு தேவையானது நடுநிலையாகக் கடமையாற்றுவதற்கான பொறுப்புணர்வே ஆகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »