பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) காலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, எல்பிட்டிய வலய குற்ற விசாணைப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, குற்றச் செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பத்தேகம - பேதுருவத்த சந்தி மற்றும் ஹல்பாதோட்ட ஆகிய பகுதிகளில் வைத்து மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 16 கிராமும் 170 மில்லிகிராமும் கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபர்கள் 22 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட கஹவத்த, பல்லேபெத்த மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Monday, September 28, 2026
பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
