Our Feeds


Wednesday, September 30, 2026

Zameera

ஜே.வி.பி. பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்

 


தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர், திங்கட்கிழமை (28) பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தேசிய பொதுச் செயலாளர் ஸ்ரீ பி. எல். சந்தோஷ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.


இதன்போது, பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் அதன் அமைப்பு கட்டமைப்பு, கிராம மட்டம் வரையிலும் கட்சி உறுப்பினர்களை ஒழுங்கமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், இந்தியாவின் அபிவிருத்தி தொடர்பாக முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள், அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் தலைமைத்துவம் ஆகியவை தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.


மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும் நட்புறவையும் மேம்படுத்துவதில், இரு கட்சிகளுக்கும் இடையிலான நட்புறவையும் புரிந்துணர்வையும் வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


இதனுடன் இணைந்ததாக, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அமைப்பின் தேசியத் தலைவர் திருமதி ரூப்குமாரி சௌத்ரி அவர்களுடனும், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகளான ஸ்ரீ வினீத் வத்ஸ் தியாகி மற்றும் திருமதி பக்தி சர்மா ஆகியோருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »