Our Feeds


Tuesday, September 1, 2026

Zameera

இலங்கை கடற்படை அதிகாரிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருது


 கடல்சார் துறையில் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி, பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் கௌரவமிக்க ‘Order of Maritime Merit’ விருது இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் தம்மிக குமாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.



ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றி வரும் ரியர் அட்மிரல் தம்மிக குமாரவுக்கு இந்த விருது, கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.


கடல்சார் துறையின் முன்னேற்றத்திற்கும், கடற்படை ஆய்வுத் துறையின் வளர்ச்சிக்கும், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், பிரான்ஸ் - இலங்கை கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவர் வழங்கிய பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


மேலும், இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான கூட்டு முயற்சியாக 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிராந்திய கடல்சார் ஆய்வு மையத்தை நிறுவி அதன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பாக பாராட்டப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »