Our Feeds


Saturday, September 12, 2026

Zameera

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: குவைத், சவூதி நிதியை பெற்றுத்தர தயார் – ஹிஸ்புல்லாஹ்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் நிறுவப்படுவதன் மூலம் அது நாட்டின் அபிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும்  பலமாக அமையும் அதனால் அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கினால் அதற்கு தேவையான நிதியை குவைத் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தில் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற தனிநபர் பிரேரைணயை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.பயண வழிகாட்டிகளைப் படி


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும்  தென் கிழக்கு கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கில் மறைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இன்று அந்த பல்கலைக்கழகம் மூவினங்களையும் சேர்ந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கையும் 6 பீடங்களையும் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.



இந்த பல்கலைக்கழகத்தில் மருத்து பீடத்தை ஆரம்பிப்பதற்கு 2022ஆம் ஆண்டு, அப்போது அங்கு உப பீடாதிபதியாக இருந்த அபூபக்கர் ரமீஸ் அதுதொடர்பில் பிரேரணை தயாரித்து, பல முயற்சிகளை மேற்கொண்டபோதும்  நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை. என்றாலும் தற்போது அந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படுவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசல் சுமார் ஏழு ஏக்கர் காணியை சுகாதார அமைச்சுக்கு  கொடுத்தது, சுகாதார அமைச்சு அதில் வைத்தியசாலாையை அமைத்து, சுமார் 100 மில்லியன் ரூபாவை செலவு செய்திருக்கிறது.


மேலும் மருத்துவ பீடத்தை கொண்டுவருவதற்கு இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை மெடிக்கல் கவுன்சில் ஆகிய 6 நிறுவனங்கள் ஒன்றிணைவதன் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான நிதி உதவியையும் எங்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு நிதி அமைச்சு ஊடாக ஒரு கோரிக்கையை முன்வைக்குமானால், அதற்கு தேவையான முழு நிதியையும் குவைத் மற்றும் சவூதி அபிவிருத்தி அபிவிருத்தி நிதியத்தில் இருந்து பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »