Our Feeds


Monday, September 21, 2026

Zameera

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த மொரகஹகந்த பாலத்தின் பணிகள் ஆரம்பம்

 


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் முதலாவது பாலத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டன.


டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த மாத்தளை – மொரகஹகந்த பாலத்தின் புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டப்பட்டு இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


175 மீற்றர் நீளமுடைய இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2028 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளன.


இந்திய அரசாங்கம் வழங்கும் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்நாட்டில் 13 பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »