Our Feeds


Monday, September 21, 2026

Zameera

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்


 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. 


மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் வேறு சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது. 


விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »