Our Feeds


Sunday, October 25, 2026

ShortNews

ஞானசார தேரரை விடுவிக்க கோரும் சத்தியாகிரகம் - 10 ஆவது நாள்!


கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி  பிக்குமார்களால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று (25) 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 16 ஆம் திகதி  விகாரமகாதேவி பூங்காவிற்கு பிரவேசித்த பிக்குமார்கள் இந்த சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அன்றைய தினம் முதல் இதுவரை அவர்கள் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் தங்கியுள்ளனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை தாம் இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தங்கியிருந்த பிக்குமார்கள், பின்னர் புத்தசாசன அமைச்சிற்கு முன்னால் சென்றதுடன், அங்கு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அக்கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகத் தெரிவித்த பிக்குமார்கள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் தங்கியிருக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »