வத்தளை, மாபோல பகுதியில் 18 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கொழும்பு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து இந்த அதிரடி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரின் வசம் இருந்த 9 கிலோ 229 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோ 264 கிராம் ஹெரோயின், போதைப்பொருட்களை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தராசு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
