Our Feeds


Wednesday, October 28, 2026

ShortNews

களு கங்கை வெள்ள எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!


களு கங்கை வடிநிலப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரித்து, நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள எச்சரிக்கையை மேலும் 24 மணிநேரத்திற்கு நீடித்துள்ளது.

நீர்மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »