Our Feeds


Friday, October 30, 2026

Zameera

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்

 

(எம்.நியூட்டன்)


வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று (30) வெள்ளிக்கிழமை  28ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். 


வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.


யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் ,  அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. 


இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், 28ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »