கொழும்பு, கிராண்ட்பாஸ், லெயாட்ஸ் ப்ரோட்வே பகுதியில்
அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, உடனடியாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஆவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
