Our Feeds


Saturday, October 31, 2026

Zameera

சிறுமி துஷ்பிரயோக வழக்கு: நபருக்கு 30 ஆண்டுகள் சிறை!

 

பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை  பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் தாயாருடன் தாகாத தொடர்பினை பேணிவந்த நபருக்கு எதிரான  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து  பிரதிவாதிக்கு 30 வருடங்கள்  சிறைத்தண்டனை விதித்து பாணதுறை மேல் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.


குறித்த வழக்கு விசாரணைகள் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி வழக்கு  மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான  சிறுமியின் தாயுடன் தகாத உறவிணை பேணிவந்த நபருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த  2 குற்றச்சாட்டுகளுக்கும்  அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அதற்கமைய, முதல் குற்றச்சாட்டிற்கு 15 ஆண்டுகள்  சிறைத்தண்டனையும் 3,000 ரூபா அபராதமும், இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும்பட்சத்தில்  ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தனித்தனியாக ஒரு மாதம் வீதம் மேலும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.



மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம்  ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 5 இலட்சம்  ரூபா நட்டஈடு செலுத்துமாறு  பிரதிவாதிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது.   குறித்த இழப்பீடு  தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 18 மாதங்கள் வீதம் மேலும் 3 வருடங்கள்  சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »