Our Feeds


Monday, October 5, 2026

Zameera

குமார ஜெயகொடிக்கு எதிரான வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை நவம்பர் மாதம் 03ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றதுடன், மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »