Our Feeds


Monday, October 26, 2026

SHAHNI RAMEES

ஊழல், பிளவு மற்றும் அரசியல் பொய்களுக்குக் கிடைத்த தோல்வி' - லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

 

பிரேசிலின்  நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.


ஊழல், சமூகப் பிரிவினைகள் மற்றும் அரசியல் பொய்களுக்கு எதிராகப் பிரேசில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


லூலாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, தோல்வியடைந்த அரசியல் பரம்பரைகளும், சட்டத்தை விட அதிகாரமே உயர்ந்தது என்று கருதும் கடந்த கால சக்திகளும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும், பிரேசில் நாட்டை மீண்டும் ஒருமுறை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தலைமை தாங்குவதற்காக லூலா டா சில்வாவுக்கு தனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »