Our Feeds


Sunday, October 4, 2026

SHAHNI RAMEES

5,000/- இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

 

சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாகன விபத்தொன்றுடன் தொடர்புடையதாகக் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கை எதுவுமின்றி மீண்டும் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றமையினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (02) பிற்பகல் சீதுவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் வைத்து இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »