இந்த அரசாங்கம் பௌத்தத்திற்கு எதிரானது மக்களுக்கு எதையும் வழங்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி மக்கள் மத்தியில் ஒரு கருத்தை உருவாக்க முற்படுகிறார்கள் என தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி மக்கள் மத்தியில் ஒரு கருத்தை உருவாக்க முற்படுகிறார்கள். அதாவது இந்த அரசாங்கம் அடுத்த மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் கவிழ்ந்துவிடும் என்று. இது போன்ற பொய்களை மக்களிடம் கொண்டு சென்று இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருடன் இணைந்து கோபெல்ஸ் செய்தது போன்ற அந்த கோபெலிசத்தில்தான் ஓட முற்படுகிறார்கள்.
நாட்டு மக்கள் சொல்லும் கருத்து..
ஆனால் நாட்டின் மக்கள் எங்களை விட நன்றாகச் சில விடயங்களைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் கூறுகிறார்கள் 'இல்லை அரசாங்கம் செல்லும் பாதை சரியானது. இந்த அரசாங்கம் சட்டத்தை முறையான வழியில் பாதுகாக்கிறது. இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நாட்டில் முறையான சட்டக் கட்டமைப்பு இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் நீதித்துறைச் செயற்பாடு சரியான முறையில் நடைபெற வேண்டும்.
இவை நாட்டின் மக்கள் கூறும் விடயங்களாகும். கொழும்பு சமூகத்தைக் தாண்டி நாட்டின் மக்களுக்கு கீழ்மட்ட நிலவரம் தெரியும். அந்த மக்களுக்குத்தான் அநீதி என்னவென்று புரிகிறது.கிராமத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லை.எந்தவொரு அரசாங்கத்தினதும் பிரதான பொறுப்பு அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். அரசியலமைப்பின் 9ஆவது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது பௌத்தத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று. எனவே அரசியலமைப்பின் அந்த 9ஆவது பிரிவை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
